சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 9
சிவனும் தென்னையும்
நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும்,
ஆண்டிக்கும் வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான்
வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும் நற்றென்னை
பாரில் சிவனுக்கு ஈடு.
பொருள் :- சிவன் – தென்னை.1)இறைவன் புகழ் நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும்.
2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும்.
3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான்.
தென்னையும் நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்.
4) இறைவன் முன் ஆண்டி அரசன் பேதமில்லை.
தென்னையும் எவ்விதப் பேதமும் காட்டாமல் அனைவருக்கும் தன்வாழ்வின் பலன்களைத் தந்தளிக்கும்.
5) ஆன்மீகத்தைத் தோண்டிப்பார்த்தால் வீடென்ற வேர் கிடைக்கும். தென்னையிலும் வேர் இருக்கும்
6) சிவனை எண்ணுவோர்க்கு தடுமாற்றப் பிணியும், தென்னையின் பயன்களை உண்போர்க்கு உடலுள்ளப் பிணிகளும் நீங்கும்.
ஆதலால் சிவனும் தென்னையும் ஒன்று.
Comments
Post a Comment