Skip to main content

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்




கறுப்புப் பூனை


கறுப்புப் பூனை கண்கள் மூடி
என்ன பண்ணுது? – அங்கு
என்ன பண்ணுது? – அது
கடந்து போகும் எலியைத் தின்னக்
காத்திருக்குது! – அங்குக்
காத்திருக்குது!

சுறுசுறுப்பாய் ஓடும் எலி
என்ன பண்ணுது? – அங்கு
என்ன பண்ணுது? – அது
தூங்கு கின்ற பூனைக் காலைப்
பார்த்திருக்குது! – காலைப்
பார்த்திருக்குது!

சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue