தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்




(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி)

தமிழ்த்தாய் வணக்கம் 21-23


பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம்
நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக்
கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார்
சீறா துறாரே தெளிவு (21)

நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை
வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச்
சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே !
வாராய் துணையாக வா. (22)

அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச்
செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு
என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே
றொன்றும் கொளாதென் உளம். (23)
பாவலர் நாரா. நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்