Skip to main content

தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்


தமிழ்த்தாய் வணக்கம் 16-20

பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே
பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல்
உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி
யுள்ளித் திரிவார் உழன்று! (16)

எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை
வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில்
அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம்
உறல்கடிதோ அன்னய் உரை.  (17)

பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர்
முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம்
உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர்
திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18)

எங்கும் தமிழாய் எதிலும் தமிழேயாய்
மங்கா திலங்கி மதிப்புயரச் – சிங்கத்
தமிழன் என வாழும் சீரான வாழ்வுக்
கமிழ்தென்  றொருபெயருண் டாம் ! (19)

பெற்றெடுத்த பிள்ளையுடன் பேசிக் களிப்பதற்கு
மற்ற மொழிதேடி மாய்வாரே ! – உற்ற
வளங்கொழிக்கும் அன்னை வழிமொழியை நாடா
திளங்குருத்திற் சூடேற்றி யாங்கு !  (20)
(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்