தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்


eezham02
எவராலே?
ஈழம் சிதைவது எவராலே?
            தமிழர் அழிவது யாராலே?
கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில்
            தமிழர் மடிவது எவராலே?
உணவும் நீரும் சிறிதுமின்றி
            மருந்தும் உடையும் கிட்டாமல்
நாளும் ஒழியும் சூழலுக்குத்
            தள்ளப்பட்டது யாராலே?
கற்பும் பொற்பும் சிதைப்பவரை
            ஓட ஓட விரட்டாமல்
அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை
            வந்தது இன்று எவராலே?
தமிழர் அழுவது யாராலே?
            இந்தியம் சிரிப்பது எவராலே?
– இலக்குவனார் திருவள்ளுவன்


Comments


  1. ஈழம் சிதைவது எவராலே?
    தமிழர் அழிவது யாராலே?
    சிந்திக்க வைக்கின்ற
    கேள்விக் கணைகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ஐயா.ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுப்பார்த்தால், தமிழீனம் விழிப்புறும்! எழுச்சி பெறும்! வாகை சூடும்!

      Delete

  2. ஈழம் சிதைவது எவராலே?
    தமிழர் அழிவது யாராலே?
    சிந்திக்க வைக்கின்ற
    கேள்விக் கணைகள் ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்