Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 003. நீத்தார் பெருமை


(002. வான்சிறப்பு தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

001 அறத்துப் பால்       

01 பாயிர இயல்        

 அதிகாரம்   003. நீத்தார் பெருமை      

       துறவியரது, சான்றோரது ஆற்றல்கள்,
         அறவியல் பண்புகள், பெருமைகள்.
  1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும், பனுவல் துணிவு.
   ஒழுக்கநெறி நின்று, துறந்தார்தம்
       பெருமையை நூல்கள் போற்றட்டும்.
  1. துறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்(து),
இறந்தாரை எண்ணிக்கொண்(டு) அற்று.
     துறந்தார் பெருமையை, உலகில்
       இறந்தாரை எண்ண இயலாது.
  1. இருமை வகைதெரிந்(து), ஈண்(டு)அ)றம் பூண்டார்
பெருமை, பிறங்கிற்(று) உலகு.
     நல்லன, கெட்டன ஆராய்ந்து
       துறந்தார், பெருமையே உயர்ந்தது.
  1. உரன்என்னும் தோட்டியான், ஓர்ஐந்தும் காப்பான்,
வரன்என்னும் வைப்பிற்(கு),ஓர் வித்து.
     அறிவால், ஐம்புலனை அடக்குவார்,
       உலகிற்கு, உயர்விதை ஆவார்.
  1. ஐந்(து)அவித்தான் ஆற்றல், அகல்விசும்பு(உ) ளார்கோமான்
இந்திரனே, சாலும் கரி.
     ஐம்புல அடக்கத்தார் ஆற்றலுக்குக்,
       கோமான் இந்திரனே சான்றாளன்.
  1. செயற்(கு)அரிய, செய்வார் பெரியர்; சிறியர்,
செயற்(கு)அரிய, செய்கலா தார்.
     பெரியார், அரிய செயல்களைச்
       செய்வார்; சிறியார், செய்யார்.
  1. சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம்,என்(று), ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
     ஐம்புல வகைகளை ஆராய்ந்து,
       அடக்கியாரிடம் உலகம் அடங்கும்.
  1. நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து,
மறைமொழி காட்டி விடும்.
     நிறைமொழியார் பெருமையை, அவர்தம்
       உண்மை மொழிகளே, காட்டும்.
  1. குணம்என்னும், குன்(று)ஏறி நின்றார் வெகுளி,
கணமேயும் காத்தல் அரிது.
     குணக்குன்றாய் உயர்ந்து நிற்பார்
       சினத்தை ஒருநொடியும் காவார்.        
  1. அந்தணர் என்போர், அறவோர்;மற்(று) எவ்வுயிர்க்கும்,
செந்தண்மை பூண்(டு)ஒழுக லான்.
     எவ்உயிர்மீதும், அருள்பொழிந்து காக்கும்
       அறத்தவரே, அந்தணர் ஆவார். 
– பேராசிரியர்வெ. அரங்கராசன்



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்