திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்
001 அறத்துப் பால்
002 இல்லற இயல்
அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம்
கணவர், மனைவியரது நல்பண்புகளும்,
இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.
- மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்
மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு
தகுதியள்; நலம்சார் துணை.
- மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,
இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,
மற்ற சிறப்புகளால் பயன்இல்.
- இல்ல(து)என்? இல்லவள் மாண்(பு)ஆனால்; உள்ள(து)என்?
சிறப்[பு]உள்ள இல்லாளால், இல்ல[து]என்?;
சிறப்[பு]இல்லா அவளால், உள்ள[து]என்?.
- பெண்ணின் பெரும்தக்க யாஉள? கற்(பு)என்னும்,
திண்மைக் கற்பின் பெண்மையைவிடப்,
பெருமை தகுதியது வே[று]எது?
- தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழு(து)எழுவாள்,
கணவனை மதிப்பவள் “பெய்”எனப்,
பெய்யும் பருவமழை போன்றவள்.
56. தன்காத்துத், தன்கொண்டான் பேணித், தகைசான்ற
சொல்காத்துச், சோர்(வு)இலாள், பெண்.
தன்காத்தலில், கணவனைப் பேணலில்,
சொல்காத்தலில், சோர்[வு]இலாள், பெண்.
- சிறைகாக்கும் காப்(பு)எவன் செய்யும்….? மகளிர்,
மகளிர், தாமேதம் கற்பைக்,
காக்கும் காப்பே, தலையானது.
- பெற்றால், பெறின்பெறுவர் பெண்டிர், பெரும்சிறப்புப்
துணைநலக் கணவரைப் பெறுமகளிர்,
தேவர் உலகு போவர்.
- புகழ்புரிந்த இல்இல்லோர்க்(கு) இல்லை, இகழ்வார்முன்,
புகழ்செய்யும் இல்லாளை இல்லான்,
பெருமித நடையும் இல்லான்.
- மங்கலம் என்ப, மனைமாட்சி; மற்(று)அதன்
மங்கலம், மனைஅழகு; அதனது
அணிகலம், நல்மக்கள் பேறு.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Comments
Post a Comment