Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு


 arangarasan_thirukkural_arusolurai_attai

01. அறத்துப் பால்        

02. இல்லற இயல்    

அதிகாரம் 007. மக்கள் பேறு


     ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,
     மக்களைப் பெறுதல் பெரும்பேறு.

  1. பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த
     மக்கள்பே(று), அல்ல பிற.

     அறி[வு]அறிந்த மக்கள் பேறே,
       பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.    

  1.  எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்
   பண்(பு)உடை மக்கள் பெறின்.
       பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,
       எப்பிறப்பிலும் தீமைகள் தீண்டா.

  1.  தம்பொருள் என்ப,தம் மக்கள்; அவர்பொருள்,
  தம்தம் வினையான் வரும்.

       தம்பொருள், தம்மக்கள்; அவர்பொருள்,
அவர்தம் செயல்களால் அமையும்.

  1.  அமிழ்தினும், ஆற்ற இனிதே,தம் மக்கள்
   சிறுகை அளாவிய கூழ்.

       தம்மக்களின் சிறுகை துழாவும்
       கூழும் அமிழ்தைவிடவும் இனிது.

  1.  மக்கள்மெய் தீண்டல், உடற்(கு)இன்பம்; மற்(று),அவர்
     சொல்கேட்டல், இன்பம் செவிக்கு.

        குழந்தை வந்து தொடுதல் உடலுக்கும்,
      மழலைச்சொல் காதுக்கும் இன்பம்.



  1. “குழல்இனி(து); யாழ்இனி(து)” என்ப,தம் மக்கள்
     மழலைச்சொல் கேளா தவர்.

       தம்குழந்தையின், மழலை கேளார்க்கே,
    குழல்இசை, யாழ்இசை இனிது.

  1.  தந்தை மகற்(கு)ஆற்றும் நன்றி, அவையத்து,
     முந்தி இருப்பச் செயல்.

         மகனை அவைகளில் முன்நிறுத்துதல்,
      தந்தைக்கு உரிய கடமை.

  1.  தம்மின்,தம் மக்கள் அறி(வு)உடைமை, மாநிலத்து,
   மன்உயிர்க்(கு) எல்லாம் இனிது.

       மக்களைத், தம்மைவிட நல்அறிஞர்
     ஆக்கி, உலகிற்குத் தருக.     .

  1.  ஈன்ற பொழுதின், பெரி(து)உவக்கும், தன்மகனைச்,
     “சான்றோன்” எனக்கேட்ட தாய்.

       மகனைச்சான்றோன்எனக் கேட்பவள்,
     பெற்ற பொழுதினும் மகிழ்வாள்.

  1.  மகன்,தந்தைக்(கு) ஆற்றும் உதவி, இவன்தந்தை,
     “என்நோற்றான் கொல்?”எனும் சொல்.

         “இவனது தந்தை தவத்தோன்”எனச்
         சொல்வித்தல் நன்மகன் செய்உதவி.

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue