திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு
001 அறத்துப் பால்
01 பாயிர இயல்
002. வான்சிறப்பு
உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்
மழையின், பயன்களும் சிறப்புக்களும்.
- வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான்,
உலகையே நிலைக்கச் செய்வதால்,
மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க.
- துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத்,
உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,
உணவாக ஆவதும் மழைதான்.
- விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து),
மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து
உயிர்களைக், கடும்பசி வாட்டும்.
- ஏரின் உழாஅர் உழவர், புயல்என்னும்,
மழைஎனும் நிறைவளம் குறைந்தால்,
உழவர் உழவினைச் செய்யார்.
- கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய்,மற்(று) ஆங்கே,
கெடுப்பதும், கெட்டார்க்குக் கொடுப்பதும்,
அடுத்துப் பெய்யும் மழைதான்.
- விசும்பின் துளிவீழின் அல்லால்,மற்(று) ஆங்கே,
நல்மழைத் துளிகள் விழாவிட்டால்,
புல்நுனியையும், காண முடியாது.
- நெடும்கடலும், தன்நீர்மை குன்றும், தடிந்(து)எழிலி,
கருமுகில் மழையைத் தராவிட்டால்,
பெருங்கடலும், தன்இயல்பில் குறையும்.
- சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வானம் வறண்டால், தேவர்க்கும்,
வழிபாடுகள், திருவிழாக்கள் நடவா.
- தானம்,தவம், இரண்டும் தங்கா, வியன்உலகம்,
வானம் மழையை வழங்காவிடின்,
தானமும், தவமும் நிகழா.
- நீர்இன்(று), அமையா(து) உல(கு)எனின், யார்யார்க்கும்,
நீர்இல்லாமல், உலகமும், மழைஇல்லாமல்,
யார்க்கும் ஒழுக்கமும் அமையா.
Comments
Post a Comment