Thamizhk katamaikal 103: தமிழ்க்கடமைகள் 103.தமிழன்னையடி வாழ்த்துவோம்

தமிழ்க்கடமைகள்

103.தமிழன்னையடி வாழ்த்துவோம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/10/2011


நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி- எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைந்த மொழி- எந்தம்
எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந்
திருந்து திருந்து மொழி- வேற்று
வண்ணப் பிறமொழி கற்க வுதவிய
வண்மைபொ ருந்தும் மொழி- அதனால்
எங்கள் தமிழன்னை வாழிய வாழிய
வென்றடி வாழ்த்துவமே
- புலவர் அ.வரத நஞ்சையப்பப் பிள்ளை: தமிழரசி குறவஞ்சி


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்