Ilakkuvanarin pataippumanikal 70: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 70. தமிழின் சொல்வளம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

70. தமிழின் சொல்வளம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011


மரம் செடி கொடி முதலியனவற்றை இரண்டு வகையாகப் பிரித்துள்ளார். வெளிப்பக்கம் வைரம் பொருந்தியனவற்றைப் ’புல் என்றும் உட்பக்கம் வைரம் பொருந்தியனவற்றை ’மரம் என்றும் அழைத்துள்ளார். புல் என்னும் பிரிவுக்கு உட்பட்டன வற்றிற்குரியனவாய் அவற்றின் உறுப்புக்களைக் குறிப்பன, தோடு, மடல், ஒலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை முதலியனவாம்.
மரம் என்னும் பிரிவுக்குட்பட்டவற்றின் உறுப்புகளைக் குறிப்பன : இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, காய், பழம், தோல், செதிள், வீழ் முதலியனவாம்.
தமிழின் சொல்வளம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை எண்ணி மகிழ்மின். ஏனைய மொழிகளில் இவ்வாறு காணக் கூடுங்கொல்?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 256-257)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்