இலக்குவனாரின் படைப்பு மணிகள் 78. இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்
இலக்குவனாரின் படைப்பு மணிகள்
78. இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/10/2011
இந்திய மொழிகளுள் ஆரியமல்லாத பிறவெல்லாம் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியத் தோற்றத்தைப் பெற்றள்ளன. ஆரியமும் இந்நாட்டிற்கு வந்து பழந்தமிழோடு தொடர்பு கொண்ட பிறகுதான் எழுதும் முறையை ஆக்கிக் கொண்டது. தமிழோ ஆரியத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே தனக்கென எழுத்தையும் நூலையும் பெற்றுள்ளது. ஏன்? இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான். ஆரியம் இந்நாட்டுக்கு வரும் முன்பு இமயம் முதல் குமரி வரை வழங்கிய மொழி தமிழே. ஆரியமும் தமிழும் கலப்புற்றதனால் விளைந்ததே இந்திய மொழிகளின் தோற்றம். மொழியின் அமைப்பும் அடிப்படையும் தமிழாய் இருக்க, சொற்கள் ஆரியத்திற்கு ரியனவாய் இருக்கின்றன.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 278:279)
Comments
Post a Comment