Ilakkuvanarin pataippumanikal 72: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 72. உலக ஆராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

72. உலக ஆராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/10/2011



உயிர்களைப்பற்றி ஆராய்ந்த ஆசிரியர் உலகம் எவ்வாறு உண்டாயிற்று என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  நிலம், தீ, நீர், வளி, விசும்பு எனும் ஐந்தால் ஆனது உலகம் என்று கூறியுள்ளார்.  இவ் வைந்தின் ஆராய்ச்சியே இன்றைய உலக வாழ்வின் உயர்நிலையாகும்.  இவ்வாராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார்.

” நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”
வேற்று நாட்டார் எல்லாரும் இவ்வைந்திணையும் ஆட்படுத்தி விசும்பு வெளியையும் தமதாக்கி வீறு கொண்டு உலவுகின்றனர்.  தொல்காப்பியர் வழிவந்த தமிழரோ தொல்காப்பியரையும் அறியாது தொல்மெய்ப்பொருள் ஆராய்ச்சியுமின்றித் துன்ப வாழ்வில் துயில் கொண்டு இன்பவுலகு என்று காண்போம் என்று ஏங்கி நிற்கின்றனர்.  உறக்கம் நீங்கி உண்மை காண்பார்களாக ! தொல்காப்பியம் துணை செய்வதாக !
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 258-259)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்