Ilakkuvanarin pataippu manikal 74: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 74. இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 74. இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/10/2011




இயற்றமிழ்க்குரியன வெல்லாம் கூறி இறுதியில் இசைத் தமிழுக்குரியதைக் கூறியுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது.  அன்றியும் இசைத் தமிழுக்குரிய பாடல்கள் இலக்கியமாம் தன்மைக்கு உரியனவாகவும் இருத்தல் வேண்டும் என்று உணர்த்தியமை போற்றத்தக்கது.  இன்றைய திரைப் படப் பாடல்களில் பலவும், இசையரங்கில் பாடப்படுவன பலவும், இலக்கியமாம் சிறப்புடையனவாக இருப்பதைக் காணலாம்.  இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்; வேற்றுமொழிப் பாடல்களாக இருத்தல் பொருந்தாது.  என்பதையும் இந்நூற்பா உணர்த்துகின்றது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 274)
 
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்