Ilakkuvanarin pataippu manikal 77: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 77. இலக்கிய இலக்கணம் (Science of Literature) தமிழில்தான் உண்டு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

77. இலக்கிய இலக்கணம் (Science of Literature) தமிழில்தான் உண்டு

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/10/2011





தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும், மொழி நூல் (Science of Language) என்றும், பொருள் இலக்கியம் பற்றிய நூல் (Science of Literature) என்றும் கூறி அவ் வகையில் தொல்காப்பியத்தை ஆராய்ந்தோம்.  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் தமிழ் மொழியின் நிலையும் தமிழ் இலக்கிய நிலையும் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்தோம். இவ்வாறு அறிவதும் தமிழ் மக்கள் வரலாற்றின் ஒரு பகுதிதானே.  மொழியினால் உருவாகிய மக்கள் இனத்தை அறிவதற்கு முன்னர் மக்களினத்தால் உருவாகிய மொழியைப்பற்றி அறிவதும் வேண்டியதுதானே.  மொழி நூலறிஞன் வரலாறு அறிய வேண்டும் ; வரலாற்று அறிஞன் மொழி நூல் அறிய வேண்டும்; தமிழக மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணையாகத் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும்  அறிந்தோம்.  ஏனைய மொழிகளில் இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் (Criticism of Literature) உண்டு;  ஆனால் இலக்கிய இலக்கணம் (Science of Literature) இவ்வளவு விரிந்த முறையில் தனிபாகச் செய்யப்பட்டிலது.  தமிழில்தான் உண்டு என்பதை அறிந்தோம்.  அதனால் தமிழ் மொழியின் சிறப்பும் ஏற்றமும் வளமும் தெற்றெனப் புலனாகின்றன.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 278)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்