Posts

Showing posts from October, 2011

Ilakkuvanarin pataippu manikal 81: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும் பதிவு செய்த நாள் : 29/10/2011  மக்களுக்குப் பயன்படும் முறையாலேயே மொழி வளர்கின்றது என்றாலும், அதன் வளமும் செழிப்பும் செறிவும் அதன் இலக்கியத்தினாலேயே பெற வேண்டியுள்ளது.  ஒரு மொழியின் வளர்ச்சிப்போக்கில் மாறுதலுற்றுப் பிரிந்து சிதைந்து மறைந்து போகாமல் இருப்பதற்குத் துணை செய்வது இலக்கியமே.  மொழியிலிருந்து தோன்றுவது இலக்கியம்; இலக்கியத்தால் வளம் பெறுவது மொழி. ஆதலின் தமிழின் வளத்தைப் பெருக்குவதற்குத் தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) http://www.natpu.in/?p=16738

Ilakkuvanarin pataippu manikal 80 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 27/10/2011  கடலாலும் ஆரிய மொழியாலும், வழங்கிவரும் பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.  பரந்த நிலப்பரப்பில் வழங்கிவரும் மொழி காலப்போக்கில் கிளை மொழிகளாகப் பிரிந்து, கிளை மொழிகளாக உருவெடுத்து வேற்று மொழிகளாக வளர்ந்து விடுவது மொழி வரலாறு அறிவிக்கும் உண்மையேயாயினும், ஆரியம் இந் நிலை மாற்றங்களை விரைவுபடுத்தி விட்டது  என்பதனை மறுத்தல் இயலாது.  ஆரியம் தமிழ் வழங்கும் பரப்பளவினைச் சுருங்கச் செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை.  பயன்படுவகையிலும் சுருங்கச் செய்து விட்டது. ஆரியமே இந்நாட்டின் பண்பாட்டு உயர்மொழி யென்றும் கடவுள் மொழி என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு கல்வி, சமயம், கடவுள் வழிபாடு. சடங்கு முதலிய மக்கட்குப் பயன்படு துறைகளில் எல்லாம் ஆரியமே ஆட்சி பெற்றுவிட்டது; தமிழகத்தில் பல்லவர் காலத்தில் அரசியலிலும் முதன்மைபெற்று ஆட்சி மொழியாகி விட்டது.  தமிழ் வீட்டளவில் சுருங்கிய முறையில் பயன்படுத்தப் பட்டாலும...

Ilakkuvanarin pataippumanikal 79 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 79. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 79.  திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 26/10/2011  ஆதலின் இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.  தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர். திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.  கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்   தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது.    திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279) http://www.natpu.in/?p=16734

Ilakkuvanar explanations about family life in Thirukkural: இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம் : பேராசிரியர் சி.இலக்குவனார்

Image
இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம் பேராசிரியர் சி.இலக்குவனார் பதிவு செய்த நாள் : 26/10/2011  இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். இல்லாள் என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். இல்லான் என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக் குரியவர்கள் பெண்களே எனத் தமிழ் முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மை யுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும். பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. For, in as much as  every family is part of a state.(Aristotle: Politics: page 78) இல்லறங்கள் இன்றேல் நாடு ஏது? ஆட்சி எதற்கு? இல்லறம், நாகரிகத்தின் உயர்நிலையைக் காட்டுவதாகும்; விலங்கு நிலையினின்றும் வேறு படுத்துவதாகும். நினைத்தவுடன் கூடி வெறுத்தவுடன் பிரிந்து போவது மாக்களுக்கு உரியதேயன்றி,  உயர்மக்களுக்கு உரியது ஆகாது. ஒருவனும் ஒருத்தியும் காதலால் பிணிப்புண்டு கடிமணம் புரிந்து கொண்டு இல்லறப் பொறு...

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 78. இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  78. இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 25/10/2011  இந்திய மொழிகளுள் ஆரியமல்லாத பிறவெல்லாம் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியத் தோற்றத்தைப் பெற்றள்ளன.  ஆரியமும் இந்நாட்டிற்கு வந்து பழந்தமிழோடு தொடர்பு கொண்ட பிறகுதான் எழுதும் முறையை ஆக்கிக் கொண்டது.  தமிழோ ஆரியத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே தனக்கென எழுத்தையும் நூலையும் பெற்றுள்ளது. ஏன்?  இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்.  ஆரியம் இந்நாட்டுக்கு வரும் முன்பு இமயம் முதல் குமரி வரை வழங்கிய மொழி தமிழே.  ஆரியமும் தமிழும் கலப்புற்றதனால் விளைந்ததே இந்திய மொழிகளின் தோற்றம்.  மொழியின் அமைப்பும் அடிப்படையும் தமிழாய் இருக்க, சொற்கள்  ஆரியத்திற்கு ரியனவாய் இருக்கின்றன. ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 278:279) http://www.natpu.in/?p=16732 

Ilakkuvanarin pataippu manikal 77: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 77. இலக்கிய இலக்கணம் (Science of Literature) தமிழில்தான் உண்டு

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  77. இலக்கிய இலக்கணம் (Science of Literature) தமிழில்தான் உண்டு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 24/10/2011  தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும், மொழி நூல் (Science of Language) என்றும், பொருள் இலக்கியம் பற்றிய நூல் (Science of Literature) என்றும் கூறி அவ் வகையில் தொல்காப்பியத்தை ஆராய்ந்தோம்.  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் தமிழ் மொழியின் நிலையும் தமிழ் இலக்கிய நிலையும் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்தோம். இவ்வாறு அறிவதும் தமிழ் மக்கள் வரலாற்றின் ஒரு பகுதிதானே.  மொழியினால் உருவாகிய மக்கள் இனத்தை அறிவதற்கு முன்னர் மக்களினத்தால் உருவாகிய மொழியைப்பற்றி அறிவதும் வேண்டியதுதானே.  மொழி நூலறிஞன் வரலாறு அறிய வேண்டும் ; வரலாற்று அறிஞன் மொழி நூல் அறிய வேண்டும்; தமிழக மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணையாகத் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும்  அறிந்தோம்.  ஏனைய மொழிகளில் இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் (Criticism of Literature) உண்டு;  ஆனால் இலக்கிய இலக்கணம் (Science of Literatu...

Ilakkuvanarin pataippumanikal 76- No life without literure: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 76. மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 76. மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 23/10/2011  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழக நிலையை அறிவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களுள் தொல்காப்பியமே முதன்மையானது.  மக்கள் வரலாற்றை அறிவதற்குத் துணை புரிவனவற்றுள் மொழியே முதலிடம் பெறுவது.  மொழியானது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து ஒன்றுபட்டுள்ளது.  மக்களின்றி மொழிக்கு வாழ்வில்லை; மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை.  ஆதலின் மொழியின் துணைகொண்டு மக்கள் வாழ்வை அறிதல் இயலும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 275) http://www.natpu.in/?p=16725  

Ilakkuvanarin pataippumanikal 75: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 75. தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 75. தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 22/10/2011  ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழிலக்கியம் செழித்து வளர்ந்துவந்த நெறிகளையும், இயல்பினையும் தொல்காப்பியம் சுட்டி அறிவிக்கின்றது.  தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும் (Science of Literature)  என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக.  இலக்கியச் செழிப்பு இனிதே மலர்தல் வேண்டும் மலர்க இலக்கியம் ; வாழ்க தமிழ் மொழி. ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 274) http://www.natpu.in/?p=16723 

Ilakkuvanarin pataippu manikal 74: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 74. இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 74. இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 21/10/2011  இயற்றமிழ்க்குரியன வெல்லாம் கூறி இறுதியில் இசைத் தமிழுக்குரியதைக் கூறியுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது.  அன்றியும் இசைத் தமிழுக்குரிய பாடல்கள் இலக்கியமாம் தன்மைக்கு உரியனவாகவும் இருத்தல் வேண்டும் என்று உணர்த்தியமை போற்றத்தக்கது.  இன்றைய திரைப் படப் பாடல்களில் பலவும், இசையரங்கில் பாடப்படுவன பலவும், இலக்கியமாம் சிறப்புடையனவாக இருப்பதைக் காணலாம்.  இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்; வேற்றுமொழிப் பாடல்களாக இருத்தல் பொருந்தாது.  என்பதையும் இந்நூற்பா உணர்த்துகின்றது. ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 274)     http://www.natpu.in/?p=16721

Ilakkuvanarin pataippu manikal 73: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 73. அறநெறியைக் கூறாதன இலக்கியம் ஆகா

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 73. அறநெறியைக் கூறாதன இலக்கியம் ஆகா இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 20/10/2011  “அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப” அறத்திற்கு முதன்மை கொடுத்தலே தமிழர் வாழ்வியற் சிறப்பு. “பயன் மட்டும் கருதினால் போதாது; பயன் வரும் வழியையும் கருதுதல் வேண்டும்” என்ற அடிப்படைக் கொள்கையிலேயே வாழவேண்டும்.  இலக்கியம் இலக்கியத்திற்காகவா? மக்களுக்காகவா எனின்? இலக்கியம் மக்களுக்காகவே என்பது தொல்காப்பியர் துணிபு மக்களுக்காக இயற்றப்படும் இலக்கியம் அறநெறியைப் புகட்டுவதாகவே இருத்தல் வேண்டும்.  அறநெறியைக் கூறாதன  இலக்கியம் ஆகா.  அறநெறி கூறாத இலக்கியம் இயற்றுவோர் புலவரும் ஆகார். ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 263-264) http://www.natpu.in/?p=16719  

Ilakkuvanarin pataippumanikal 72: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 72. உலக ஆராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 72. உலக ஆராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 19/10/2011  உயிர்களைப்பற்றி ஆராய்ந்த ஆசிரியர் உலகம் எவ்வாறு உண்டாயிற்று என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  நிலம், தீ, நீர், வளி, விசும்பு எனும் ஐந்தால் ஆனது உலகம் என்று கூறியுள்ளார்.  இவ் வைந்தின் ஆராய்ச்சியே இன்றைய உலக வாழ்வின் உயர்நிலையாகும்.  இவ்வாராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். ” நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” வேற்று நாட்டார் எல்லாரும் இவ்வைந்திணையும் ஆட்படுத்தி விசும்பு வெளியையும் தமதாக்கி வீறு கொண்டு உலவுகின்றனர்.  தொல்காப்பியர் வழிவந்த தமிழரோ தொல்காப்பியரையும் அறியாது தொல்மெய்ப்பொருள் ஆராய்ச்சியுமின்றித் துன்ப வாழ்வில் துயில் கொண்டு இன்பவுலகு என்று காண்போம் என்று ஏங்கி நிற்கின்றனர்.  உறக்கம் நீங்கி உண்மை காண்பார்களாக ! தொல்காப்பியம் துணை செய்வதாக ! ( தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 258...

Ilakkuvanarin Pataippumanikal 71: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 71. தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  71. தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 18/10/2011  இவ்வாறு புறம்பே காணக்கூடியவற்றின் வேறுபாட்டுப் பெயர்களை விளக்கிய ஆசிரியர் அறிவு வகையால் உயிர்களின் ஏற்றங்களை விளக்கியுள்ளமை இன்னும் போற்றுதற்குரியது. மரம் செடி கொடிகட்கு உயிர் உண்டு என்று அண்மைக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிலர் அறைவர். தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர். உயிர் மட்டும் அன்று ; அறிவும் பெற்றிருந்தன என்பதை அறிந்திருந்தனர். அறிவு வகையால் உயிர்களைப் பிரித்திருந்தனர். அப்பிரிப்பு இக்காலத்தில் உயிர் நூல் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 257) http://www.natpu.in/?p=16702

Multi personality of Dr.S.Ilakkuvanar - Thirukkural Studies: பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி நன்றி “சென்னை வானொலி நிலையம்” பதிவு செய்த நாள் : 18/10/2011  பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெற...

Multi personality of Dr.S.Ilakkuvanar-Critical Studies in Tholkappiyam :இலக்குவனாரின் பன்முக ஆளுமை - தொல்காப்பிய ஆராய்ச்சி

இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை இணைந்து நிகழ்த்தும் டாக்டர் சி. இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம் நாள்: 29.9.2011                                                                                காலை 10.00 மணி இலக்குவனாரின் பன்முக ஆளுமை தொல்காப்பிய ஆராய்ச்சி முனைவர் க. இராமசாமி பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழ...

Ilakkuvanarin pataippumanikal 70: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 70. தமிழின் சொல்வளம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  70. தமிழின் சொல்வளம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 13/10/2011  மரம் செடி கொடி முதலியனவற்றை இரண்டு வகையாகப் பிரித்துள்ளார். வெளிப்பக்கம் வைரம் பொருந்தியனவற்றைப் ’புல் என்றும் உட்பக்கம் வைரம் பொருந்தியனவற்றை ’மரம் என்றும் அழைத்துள்ளார். புல் என்னும் பிரிவுக்கு உட்பட்டன வற்றிற்குரியனவாய் அவற்றின் உறுப்புக்களைக் குறிப்பன, தோடு, மடல், ஒலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை முதலியனவாம். மரம் என்னும் பிரிவுக்குட்பட்டவற்றின் உறுப்புகளைக் குறிப்பன : இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, காய், பழம், தோல், செதிள், வீழ் முதலியனவாம். தமிழின் சொல்வளம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை எண்ணி மகிழ்மின். ஏனைய மொழிகளில் இவ்வாறு காணக் கூடுங்கொல்? (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 256-257) http://www.natpu.in/?p=16476

thamizhk katamiakal 104: தமிழ்க்கடமைகள் 104. தமிழுக்காக மடியும் நாள் திருநாளாகும்

தமிழ்க்கடமைகள்  104. தமிழுக்காக மடியும் நாள் திருநாளாகும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 13/10/2011                  எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்                 இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்                 தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்                செத்தொழியும் நாள்எனக்குத் திருநா ளாகும். - பாவேந்தர் பாரதிதாசன் [பாண்டியன் பரிசு] http://www.natpu.in/?p=16467

Ilakkuvanarin pataippumanikal 69: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 69. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  69. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்ற கொள்கைக்கு அரண் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 12/10/2011  மறி என்பது ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என்பனவற்றின் குட்டிகளைக் குறிக்கும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்பன குரங்குக் குட்டியைக் குறிக்கும். இக்காலத்தில் மக்களினத்துக்கே உரிய மகவும் பிள்ளையும் குரங்குக்கு உரியனவாக இருத்தல் சிந்திக்கத்தக்கது. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்ற கொள்கைக்கு அரண் செய்வதாகும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 253)   http://www.natpu.in/?p=16474

Ilakkuvanarin pataippumanikal 68: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 11/10/2011  இம்முதல் நூலைத் தொகுத்தும், விரித்தும், சில பகுதிகளைத் தொகுத்தும், சில பகுதிகளை விரித்தும், இரண்டும் உடன்சேரவும், மொழி பெயர்த்தும் நூலியற்றலாம் என்றார். மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும். வேற்று நாட்டுக்குரிய மரபை வேற்று மொழியில் உள்ளவாறு தமிழ் நாட்டுக்குத் தமிழ் மொழியில் தருவதால் பெரும்பயன் விளையாது. தமிழ் வழக்கும் சிதைவுறும். நாட்டுக்குப் பொருந்தாத வழக்கை நாட்டு மக்கள் வெறுப்பர். மொழி பெயர்க்கப்பட்ட நூல் எவராலும் விரும்பப்படாது. வீணே கிடந்து மறையும். ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியர், “மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என்றார். மொழி பெயர்த்து நூல் செய்தலையும் ஆசிரியர் குறிப்பிட்டதனால் ” அறிவு எங்கிருப்பினும் கொள்ளுதல் வேண்டும். நம் நாட்டில் தோன்றிய அறிவுதான் நமக்கு வேண்டுமென்று இருத்தல் அறிவுடைமையாகாது” என்பதனைத் தெளிந்திட வ...

Thamizhk katamaikal 103: தமிழ்க்கடமைகள் 103.தமிழன்னையடி வாழ்த்துவோம்

தமிழ்க்கடமைகள் 103.தமிழன்னையடி வாழ்த்துவோம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 11/10/2011  நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே - புலவர் அ.வரத நஞ்சையப்பப் பிள்ளை: தமிழரசி குறவஞ்சி http://www.natpu.in/?p=16465

Ilakkuvanarin pataippu manikal 67 :இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மரபியலில் 13 நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மரபியலில் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 10/10/2011  நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டு வனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத்துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுதலில் தவறாது. சூத்திரம் என்ற சொல்லும் உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது. நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 250) http://www.natpu.in/?p=16470

thamizhk katamaikal 102: தமிழ்க்கடமைகள் 102. உயர்தமிழ்த்தாய் வாழியரோ

தமிழ்க்கடமைகள்  102. உயர்தமிழ்த்தாய் வாழியரோ இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 10/10/2011  இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய் நடமே வாழியரோ பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ - தமிழ்த்தென்றல் திரு.விக http://www.natpu.in/?p=16463

ilakkuvanarin pataippumanikal 66 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. பதினைந்து நூற்பாக்களும் இடையில் நுழைக்கப்பட்டனவே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  66. பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய)  இடையில் நுழைக்கப்பட்டனவே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 04/10/2011  மரம், செடி, கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப் பற்றியும் அவர்களைப் சார்ந்தவற்றைப் பற்றியும் பிற இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும், விலங்குகளைப்பற்றியும் மரங்களைப் பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவும், “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 249) http://www....

thamizhk katamaikal 101 : தமிழ்க்கடமைகள் 101. வருங்காலம் தமிழின் காலம்

தமிழ்க்கடமைகள் 101. வருங்காலம் தமிழின் காலம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 04/10/2011  தாயே தமிழே தலை கவிழ்ந்த பொற்செல்வி நீ கலங்க வேண்டாம் வருங்காலம் நின்காலம் - உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தனார் http://www.natpu.in/?p=16303

Ilakkuvanarin pataippumanikal 65 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. சொற்களுக்கும் வாழ்வு உண்டு; தாழ்வு உண்டு

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  65. சொற்களுக்கும் வாழ்வு உண்டு; தாழ்வு உண்டு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 03/10/2011  செய்யுளுட்படும் பொருள்களையும் அவற்றை விளக்குவதற்குப் பயன்படும் உவமைகளையும் அறிந்த புலவர் சொற்களையும் அவற்றின் மரபினையும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும்.  சொற்களுக்கும் வாழ்வு உண்டு ; வளமுண்டு ; தாழ்வு உண்டு ; சாவு உண்டு.  சொற்களின் வாழ்வும் தாழ்வும் மக்களையே சார்ந்துள்ளன.  அவைகளைப் படைப்பவர்களும் காப்பவர்களும் அழிப்பவர்களும் மறைப்பவர்களும் வெளிப்படுத்துபவர்களும் புலவர்களே. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 240) http://www.natpu.in/?p=16233

Thamizhk katamaikal 100 : தமிழ்க்கடமைகள் 100. பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

தமிழ்க்கடமைகள் 100. பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 03/10/2011  இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம் மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள் நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே, உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. - பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்: பரந்தாமனார் கவிதைகள்: பக்கம். 48 http://www.natpu.in/?p=16237