Skip to main content

கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன்

 அகரமுதல

                                                           





கலைஞர்   என்றும்  கதிராய்   ஒளிர்வார் !

1.

திருக்குவளை  எனுமூரில்   அஞ்சுகத்தாய்

                  முத்துவேலர்  அன்பால் ஒன்றி

  ஆற்றலுருக்  கொண்டாரை  அருமைந்

            தாய்க்  கலைஞரையே  ஈன்றெடுத்தார்

திருவாகும்  கல்வியினைத் தேடுகையில்

                செந்தமிழிற்    பற்றுக்  கொண்டும்

     ஈரோட்டுப்  பெரியாரின்  ஈடில்லாப்

        பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும்

பெருமைமிகு  அண்ணாவின் பீடுநிறை

     உணர்வதனைப் பெற்றுக் கொண்டும்

    பைந்தமிழ   நாடதனில்  பாங்குறவே

                    ஐந்துமுறை  முதல்வ  ராகி

இருளடிமைத்  தீவீழ்ந்த  இனமதனை

        எழுகதிராய்  எழவும்  வைத்தோர்

    ஈடிணையும்  இல்லாதே  இசைபூக்க

          ஆண்டவரும்  கலைஞ  ரன்றோ?

2.

ஊற்றெடுக்கும்  எண்ணவழி  ஒண்டமிழர்

                 உலகத்தில் சிறந்தே  ஓங்க

     ஓயாது  பணியாற்றி  உயர்நிலையே

         அடைவதற்கு   வழியுங்  கண்டார்

கூற்றொக்கும் தமிழ்ப்பகையின் கூரழித்

           து  மூலையிலே படுக்க வைத்தார்

    கூன்விழுந்த  தமிழினத்தைக்  கொற்ற

            மதில்  ஏற்றிவைத்து  ஆளச்  செய்தார்

ஆற்றோர  மரம்போன்ற  அரசவாழ்வே

                 அற்றிடினும்  ஊக்கங்  குன்றா

     ஆண்மையுடன் தமிழினத்தை  ஆக்க

          முறச்   செய்வதனைக்  குறியாய்க்    கொண்டார்

வேற்றுநில  ஆட்சியரும்  வியப்புறவே

         தமிழ்நாட்டின்  வளர்ச்சி  கண்டார்

     வேந்துக்கே  வேந்தாகும்  வெல்கலை

            ஞர்க்(கு)  ஒப்பாவோர்  உண்டோ      பாரில்  ?

                 புலவர் பழ.தமிழாளன்,

          இயக்குநர்–பைந்தமிழியக்கம்,

                       திருச்சிராப்பள்ளி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்