புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
6. தாய்மொழிப் படலம்
- வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்து
தாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மை
ஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்
போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார்.
- தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ள
ஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறி
ஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்
பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார்.
- என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்
கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்த
வென்றுகொடு வந்தவெறி வேழமது தந்து
நன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார்.
- மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்
பாணரொடு கூடவரு பாடினியர் கொள்ளச்
சேணமரு வுங்குதிரை தேரொடு கொடுத்துங்
காணிய படிக்கவர் கலைத்தமிழ் வளர்த்தார்.
இராவண காவியம் – புலவர் குழந்தை
(தொடரும்)
Comments
Post a Comment