எரிமலையும் சிறு பொடியே! – தனிமையின் நண்பன்
எரிமலையும் சிறு பொடியே!
கண்ணாடி முன் நின்று பார்
கவலையை முகத்தில் அகற்றிப் பார்
ஓய்வின்றி உழைக்கும் கடலலையென
ஓயாது முயற்சி செய்து பார்
உன்னை நீயே அறிந்து பார்
உலகமே சிறிதெனக் கூறிப் பார்
எறும்புகளை உற்றுப் பார்
எவ்வளவு ஒற்றுமை வியந்து பார்
தோல்வியில் சிரித்துப் பார்
அதில் கற்றதை உணர்ந்து பார்
ஆசையைத் துறந்து பார்
அச்சத்தை மறந்து பார்
எதிரியை எதிர்த்துப் பார்
எரிமலையாய் வெடித்துப் பார்
வியர்வை சொட்ட உழைத்துப் பார்
வெற்றிக்கனியை சுவைத்துப் பார்
- தனிமையின் நண்பன்
- எழுத்து
Comments
Post a Comment