Posts

Showing posts from August, 2022
Image
 அகரமுதல தமிழ்நாடும் மொழியும் 3 – பேரா.அ.திருமலைமுத்துசாமி இலக்குவனார் திருவள்ளுவன்         30 August 2022         No Comment (தமிழ்நாடும் மொழியும் 2 தொடர்ச்சி) 2.  தமிழகம் மு த்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம். எல்லை தொல்காப்பியம் முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன. தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது.  சியார்சு எலியட்டு என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக மிக நெடுங்காலத்திற்கு முன்பு வடக்கே விந்திய மலையும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன . குமரிக் கண்டம் இன்று இந்துமகாக் கடலாக விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும...

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 August 2022         No Comment ( செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3 தொடர்ச்சி ) “மகராசி என்னும் வள்ளி யம்மையை நன்மனை அறங்களை நன்கு வளர்த்திட முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன் ………………………………………………………………. எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமே கனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள் என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர் என்னை நட்டோர் யாவரும் தன்னுடை உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த செயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.” இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம். 3. உரையாசிரியப் பணி நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்.  சிவஞான போதத்திற்கு ஓர் உரை கண்டு வெளியிட்டார்.  சித்தாந்தப் புலமையும் வேதாந்த வித்தகமும் விளங்க அவர் கண்ட உரை, நயம் பயப்பதாகும். உரைப்பாயிரத்தின் இறுதியில், “இறைவனையும் உயிரையும் பற்றிப் பேசும் இவ்வருமையான நூலைத் தமிழ் மக்களெல்லாம் ப...

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 August 2022         No Comment ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி ) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி   இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும்.   இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும் பரவிய ஆட்சியைப் பெற்றுள்ளன. சீனம், இந்துஃச்தானி, வங்காளம் ஆயவை தம் நாட்டை விட்டு அப்பாற் சென்றில. இவற்றில் சில வாணிபத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும், கலைக்கும், இசைக்கும், இலக்கியத்திற்கும் உரியவையாகி மக்களால் விரும்பப்பட்டுக் கற்கும் நிலையில் உள்ளன.   எடுத்துக்கூறப்பட்ட பதின்மூன்று மொழிகளுள் ஆறு ஐரோப்பிய மேற்புறத்...

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 August 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. தேவாரம்‌ பாடிய மூவருள்‌ ஒருவராகிய  சுந்தரர்‌  அவ்வூரிலே பிறந்தருளினார்‌. ‘அருமறை நாவல்‌ ஆதி சைவன்‌ என்று பெரிய புராணம்‌ கூறுமாற்றால்‌ அவர்‌ பிறந்த ஊரும்‌ குலமும்‌ விளங்கும்‌. அந்நாவல்‌, சுந்தரர்‌ தோன்றிய பெருமையால்‌ திருநாவல்‌ ஆயிற்று. ஈசனால்‌ ஆட்‌ கொள்ளப்பெற்ற சுந்தரர்‌ அவரடியவராகவும்‌, தோழராகவும்‌ சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார்‌ அவர்‌ பிறந்த ஊரைத்‌ திருநாவல்‌ நல்லூர்‌ என்று அழைப்பாராயினர்‌. நாளடைவில் அப்பெயர்‌ திரிந்து திருநாமநல்லூர்‌ ஆயிற்று. 41 புலியூர் கெடில நதியின்‌ தென்கரையில்‌ பாதிரி மரங்கள்‌ நிறைந்த புலியூர்‌, திருப்பாதிரிப்புலியூர்‌ என்று பெயர்‌ பெற்றது. விருத்தாசலத்துக்குத்‌ தெற்கே மற்றொரு புலியூர்‌ உண்டு. அதனை  எருக்கத்தம்புலியூர்‌  என்று தேவார ஆசிரியர்கள்‌ போற்றியுள்ளார்கள்‌. அத்தம்‌ என்பது க...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 68

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 August 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 67 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 24 தொடர்ச்சி “ சினிமாவில்  நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு  இரயிலில்  பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?” “அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின் அநியாயப் பழியை சுமப்பேன்?” – இதைச் சொல்லும் போதே அந்த அம்மாளின் குரல் கரகரத்து நைந்தது.  தூய்மையான அந்தத் தாயின் கண்களில் நீர்மணிகள் அரும்பிச் சோகம் படர்வதை அரவிந்தன் கண்டுவிட்டான்.  அவனுடைய உள்ளம் உருகியது. அந்தத் தாயின் தவிப்பு அவனுடைய உணர்வைக் கரைத்தது. அப்போது அரவிந்தனுடைய மென்மையான உள்ளத்...

தமிழ்நாடும் மொழியும் 2 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 August 2022         No Comment (தமிழ்நாடும் மொழியும் 1 தொடர்ச்சி) 1. தமிழ் நாடு 1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி   தொடர்ச்சி வரலாற்றுப் பகுதிகள் ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்.  வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு.  இதன் காரணமாய் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாம். இதனை மனதிலே கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆராயப் புகுந்தால், வரலாற்றிற்கு முற்பட்ட காலம், சங்கக் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், பிற நாட்டார் ஆட்சிக் காலம், மக்களாட்சிக் காலம் எனத்  தமிழ்நாட்டு வரலாற்றை ஏழு பிரிவின் கீழ் அடக்கலாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்க...