இன்று மகாராட்டிரம், நாளை தமிழகமா? – பழ.தமிழாளன்
இன்று மகாராட்டிரம் நாளை தமிழகமா?
குடியாட்சி மாண்பதனைக் குப்புறவே
கவிழ்க்கின்ற காட்சி தன்னைக்
கொள்கையற்றே ஒன்றியத்தை ஆளு
கின்ற ஆட்சியினர் இற்றை நாளில்
முடிமன்னர் போலவுமே மகாராட்டி
ரமாநிலத்தின் ஆட்சி தன்னை
முற்றாக முடிப்பதற்கு முனைப்போடு
செயல்புரியும் காட்சி காண்க
அடிமையென மக்களையே ஆக்குகின்ற
ஆரியத்தின் சூழ்ச்சி தன்னை
அடல்மறவத் தமிழினமே அகமதிலே
பதியாதே இருப்பார் என்றால்
விடிந்திருக்கும் நிலைமாறி விடியாத
இருள்சூழ்ந்த நிலையே ஒக்கும்
வெல்தமிழ இனமெல்லாம் விழிப்
போடு தமிழ்ப்பகையை விரட்ட வேண்டும்!
- புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர்-பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி
Comments
Post a Comment