தமிழ்ப்பகை தாள் பற்றுவோன் பதர் ! – பழ.தமிழாளன்
தமிழ்ப்பகை தாள் பற்றுவோன் பதர் !
1.
தமிழ்ப்பகை கால்வீழ்வான் நற்றமிழ
னாகான்
உமிழும்வாய் எச்சி உணர்.
2.
தன்மானம் அற்றே தகுசீர் பகுத்த
றியான்
என்னிருந்தும் இல்லானே தேர்.
3.
ஈராயிரம் ஆண்டின் தமிழ்ப்பகை
கால்வீழ்வான்
தேரான் தெளிவில்லான் தேர்.
4.
இனம்வீழ்த்த எண்ணிடும் ஆரியத்தின்
தாளை
மனமொப்பிச் செல்வானே மண்.
5.
நற்றமிழை முற்றுமே ஞாலத்
தழிப்பானைப்
பற்றுவான் என்றும் பதர்.
6.
ஈன்றெடுத்த தாயை இழிவுசெய்வான்
கால்வீழ்வான்
மாண்பில் மகனாவன் மன்
7.
உள்ளொன் றுவைத்துப் புறம்வேறு
பேசுவோன்
கள்ளின் கடையனே காண்.
8.
மனம்சொற் செயல்வேறாய் மண்ணகம்
வாழ்வான்
இனம்பிளக்கும் கோடரி தேர்.
9
தன்னினம் காப்பான் தலையுடையா
னென்றோர்க
மன்னிசை வாழ்வா னவன்.
10.
இனப்பகை ஓட்டி எழிற்றமிழைக்
காப்பான்
மனம்மலரும் மாண்ப னவன்.
புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர்–பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.
Comments
Post a Comment