Skip to main content

தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! – கிருட்டிண திலகா

 அகரமுதல


பா வகை:

கலி மண்டிலம்.

     தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே!

  1. ஆண்டதொரு ஆங்கிலேயர்   

          ஆட்சியிலே வைத்தாரே..

   வேண்டாத மதராசு

           வென்றதொரு   பெயர்மாற்றம்.

     நீண்டகாலப்   போராட்டம்

            நிலைத்தது     நற்பெயராய்க்

     கொண்டதொரு   தமிழ்மொழியால்    

             கண்டோமே    தமிழ்நாடு.

2.   சங்கரலிங்    கனாரேற்றார்

             சாகும்வ     ரைஉண்ணாது

      மங்காதப்    புகழ்பெற்றார்.

              மகத்தான    உயிர்நீத்தார்.

      தங்கமான சின்னதுரை

              தந்தாரே   தீர்மானம்.

       எங்கெங்கும் தமிழ்நாடு

               இசையாகப்  பரவியது.

3. நிதியமைச்சர்   பேசினாரே

             நிறைவாகப்  பேசினாரே.

     நிதிநிலையின்  அறிக்கையில் 

            நிலையாகத்    தமிழ்நாடே.

     மதிமிகுந்த    அண்ணாவும்

              மனதார    ஆதரித்தார்.

     அதிநுட்பப் பேச்சுரையால்

             அழகானப்  பெயரிட்டார்.

4. தமிழரது   நாடிதுவே.

             தனிப்பெருமை அணியாகத்

     தமிழ்மொழிக்கு  மணியாரம்.

            தமிழ்நாடு  சூட்டியதே.

     தமிழினமே பெருமையுறத்

            தமிழ்நாடு பிறந்ததுவே.

     தமிழ்நாடு  வாழியவே!

            தரணிபோற்ற வாழியவே!

முனைவர் கிருட்டிண திலகா

போரூர்சென்னை.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்