Skip to main content

பேசின.. பேசின.. – மு. இராமச்சந்திரன்

 அகரமுதல




பேசின.. பேசின..

ச்சமும் கவலையும் நோய்களும் பேசின

அடிதடி கலகமும் வறுமையும்  பேசின

க்களும் பேசினர் மனத்தோடு அழுகையும்

மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்..

ந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய்

  வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய்

ற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய்

காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய்

ல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும்

இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய்

நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய்

நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய்

ன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய்

அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய்

கொடுமைகள் கொடியேந்தி போராட்ட முழக்கமாய்

கொஞ்சவே அஞ்சுது நெஞ்சமே கலக்கமாய்…

வாய்மட்டும் தானிங்கு வரவுமாய் செலவுமாய்

வள்ளல்கள் அற்றனர் கயமைகள் வாழ்வுமாய்

பொய்மைகள் தானின்று பாராட்டுக் கூட்டமாய்

பொழுதெலல்லாம் இனிக்க நம்பிக்கை வளர்ப்புமாய்?!

  • பாவலர் மு. இராமச்சந்திரன்,
  • தலைவர், தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்