மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2022 No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய சுற்றுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனித் தோட்டம்( ‘எசுடேட்’)ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் ‘பருமாக்காரர் எசுடேட்’ என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பருமாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவு...