புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி)
இராவண காவியம்: பாயிரம் 21-25
வேறு
- படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும்
கடியுடையத் தமிழகக் காவல ராகவும்
வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய
முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம்.
- இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும்
அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு
தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங்
கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம்,
வேறு
- கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங்
கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து
தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த
வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே).
முப்பால்-வேறு
24.மெய்வ கைதெரி மேலவர் போலயாம்
செய்வ தின்னசெய் யாதன வின்னென
உய்வ கைமுழு தோர்ந்து பழந்தமிழ்
ஐயர் யாத்த வறத்தினைப் போற்றுவாம்.
- திருவுங் கல்வியுஞ் செய்தொழின் மேன்மையும்
மருவு நண்பு மருவலர் தன்மையும்
செருவு மாட்சித் திறன்முத லாகிய
பொருவி லாத பொருளினைப் போற்றுவாம்.
தொடரும்
இராவண காவியம்
புலவர் குழந்தை
குறிப்பு:
- அலங்குதல்- தத்தளித்தல். கலங்குதல்-இல்
செயல் புரிதல்
Comments
Post a Comment