புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
பெருவளநாடு
6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட
தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா
நன்கட னாடு நனிவளந் தேங்கிப்
பொன்கட னாடப் பொலிந்தது காணும்.
++
- கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக
செல்வம் கடன் கேட்க,
++
7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப
தாயய னாட ரவாவுற, நீங்கிப்
போயல ரேங்கப் பொலிவுறு செல்வம்
தாயது பண்டக சாலையை மானும்.
8. ஆயநன் னாட்டி னணியுறுப் பாக
ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச்
சேயுயர் வானின் றிகழ்மணித் தூணின்
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.
9. அம்மலை தோன்றி யதன்பெயர் பெற்றுக்
கைம்மலை கண்டு களித்தெதிர் செல்லும்
மைம்மலை போல வளனுறப் பாய்ந்தே
அம்மலை நாட்டையவ் வாறணி செய்யும்.
10. நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென்
கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு
நோட்ட மிகுமிரு நூறுகற் றெற்கில்
ஊட்டுங் குமரியா றோடின காணும்.
தொடரும்
இராவண காவியம்
புலவர் குழந்தை
++
9. கைம்மலை-யானை . அ மலைநாடு-குமரி நாடு. இது,
பெருவளத்தின் மறுபெயர்.
10. நோட்டம்-பார்வை, ஊட்டுதல்-வளஞ்செய்தல்.
++
Comments
Post a Comment