நிலா நிலா – அழ.வள்ளியப்பா




தலைப்பு, நிலா நிலா, அழ.வள்ளியப்பா ;thalaippu_nilaa,nilaa_azha.valliyappaa

நிலா நிலா


‘நிலா, நிலா, ஓடிவா.
நில்லாமல் ஓடிவா’
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே !
மலை மேலே ஏறி நீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லி கைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.

எத்த னைநாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.
உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்க லத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம் !

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா :
சிரிக்கும் பூக்கள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்