Skip to main content

சிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்




சிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்

தலைப்பு-சிறகுகள்தேவையில்லை, மரு.பாலசுப்பிரமணியன் ; thalaippu_sirakukaltheavaiyillai_maru-bala

பறக்கத் துணிந்தவர்க்கு
இறகுகள் பாரமில்லை
சிறக்கத் துணிந்தவர்க்கு
சிறகுகள் தேவையில்லை
இறக்கத் துணிந்தவர்க்கு
மரணமொரு அச்சமில்லை
துற‌க்கத் துணிந்தவர்க்குத்
துணியுமொரு மானமில்லை
மறக்கத் துணிந்தவருக்குப்
தோல்வியொரு துக்கமில்லை
நடக்கத் துணிந்தவர்க்குப்
பாதையொரு தூரமில்லை
அடக்கத் துணிந்தவர்க்குக்
காமமொரு கடினமில்லை
மடக்கத் துணிந்தவர்க்கு
நாவுமொரு நீளமில்லை
படிக்கத் துணிந்தவர்க்கு
வறுமையொரு விலக்கில்லை
முடிக்கத் துணிந்தவர்க்கு
யுத்தமொரு சத்தமில்லை
அகழத் துணிந்தவனுக்கு
அடர்பாறையொரு தடையில்லை
பழகத் துணிந்தவனுக்கு
மொழியுமொரு தடங்கலில்லை
கொடுக்கத் துணிந்தவனுக்கு
பொருளொரு குறையில்லை
தடுக்கத் துணிந்தவனுக்குப்
புனலுமொரு பொருட்டில்லை
வாழ்த்தத் துணிந்தவனுக்கு
வார்த்தையொரு பஞ்சமில்லை
வாழத் துணிந்தவனுக்கு
வாழ்வுமொரு துக்கமில்லை
balasubramaniyam_mananalamaruthuvar02
அருத்தமுள்ள இனியமனம் மரு.பாலசுப்பிரமணியன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்