தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

23. திருந்தச் செய்தல்

221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல்.
திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும்.
  1. அழகு நிறைவு மமைவுறச் செய்தல்.
திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும்.
223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம்.
ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும்.
224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும்.
திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும்.
  1. திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும்.
திருத்தமில்லாத செயல்களால் சிறுமைகள் ஏற்படும்.
  1. சிறுதொழி லெனினுந் திருந்தவே செய்க.
சிறிய தொழிலாக இருந்தாலும் திருந்தமாகச் செய்தல் வேண்டும்.
  1. சிறுதொழிற் றொகுதியே பெருந்தொழி லாவது.
சிறு தொழில்களின் தொகுப்பே பெருந்தொழில் ஆகும்.
  1. செய்யும் தொழிலிலே சிந்தையைச் செலுத்துக.
நாம் செய்யும் தொழிலில் நம் சிந்தனையை முழுமையாகச் செலுத்துதல் வேண்டும்.
  1. தொழிலினைக் கியமாய்த் துரிதமாகச் செய்க.
தொழிலை முறையாக விரைவாகச் செய்தல் வேண்டும்.
230.பிறர்செய் தொழிற்குப் பின்னிடா வகைசெயல்.
செய்யும் தொழிலை மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்தல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum