Skip to main content

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! – தாமோதரன் கபாலி




தலைப்பு-செந்தமிழ், தாமோதரன்கபாலி ; thalaippu_sandhamolikkum_senthamizhe_kabali
சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!

முத்து முத்தாய்த் தமிழ்ச்சொற்கள்
முந்தும் உயிரை அரவணைக்கும்
கொத்துக் கொத்தாய்ப் பெரும்வினைகள்
கொள்ளும் உயிரைக் கடைத்தேற்றும்
சித்துச் சித்தாய் அகமடங்க
திங்கள் ஒளியாய்க் குளிர்விக்கும்
சத்துச் சத்தாய் உயிர்க்கலந்து
சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்