பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20
16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித்
திருவுடன் வாழ்தல் திறம்.
17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில்
வாழும் குறளை வழுத்து.
18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில்
ஓடிவந்து நிற்கும் உணர்.
19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார்
தெள்ளிய நெஞ்சுடை யார்.
20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத்
தப்பாமல் கற்போம் தெளிந்து.

– புலவர் தி.வே.விசயலட்சுமி
பேசி – 98415 93517

Comments
Post a Comment