இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்




தலைப்பு- இடையில் நிறுத்தாதே, மாம்பலம் சந்திரசேகர் ;thalaippu_idiyileniruthaathe_chanthirasekar

இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே!

பேதைப் பருவத்தில் காதைத் திருகாதே!
வாதைச் செய்தேயவர் வசந்தம் திருடாதே!
பாதை பள்ளம் கல்லுமுள்ளு ஓடட்டும் !
மேதை மேன்மை இங்கே ஆரம்பிக்கப்படும்!
மரம் ஏறியே மார்பு தேயட்டும்!
கரம் சிறாய்ப்பு வலியும் அறியட்டும்!
நீச்சல் அவசியம் கற்றுத் தேறட்டும்!
காய்ச்சல் வந்தாலும் மழையில் நனையட்டும்!
மேய்ச்சல் மாடுகளை ஓட்டி மகிழட்டும்!
பாய்ச்சல் செய்தே ஆற்றில் நீந்தட்டும்!
சாளரச் சிறை ஞாயிறாவது திறக்கட்டும்!
காலற ஓடியாடி ஆனந்தமாய் ஆடட்டும்!
பாலர் காலம் நினைவில் பதியட்டும்!
கோளாறு செய்யாதே இயற்கையா வளரட்டும்!
மாம்பலம்  ஆ.சந்திரசேகர் : mambalam_chanthirasekar
– எழுத்தாளர், புரவலர் மாம்பலம் ஆ.சந்திரசேகர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்