தலைப்பு-பொய்தீர்ஒழுக்கம்-தி.வே.விசயலட்சுமி ; thalaippu_neritrhandhaay_vahzi_thi.ve.visayalatchumi

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15

  1. குன்றாப் புகழும், குறையா வளமும்
என்றும் குறளால் வரும்.

  1. இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத்
திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து.

  1. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள்
இருளற ஓதுவோம் இனிது.

  1. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின்
எக்காலும் வாழ்வோம் இனிது.

  1. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும்
எப்போதும் ஏத்துவம் ஏற்று.
தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi
– புலவர் தி.வே.விசயலட்சுமி 
    பேசி -98415 93517.