Skip to main content

விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்




விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்

தலைப்பு-விரல்நுனி, தீ, இரவிகல்யானராமன் : thalaippu_viralnunikalilthee_ravikalyanaraman

விரல் நுனிகளில் தீ! தீ! – அவள்
விரல் நுனிகளில் தீ!
மிகஅழகிய முகமும் – ஒரு
கொடியசைகிற உடலும்
இளவயதினள் கனிமொழியினள்
எழிலுருவினள் எனினும் – அவள்
விரல் நுனிகளில் தீ
கண்ணனைத் தொட்டவளோ – கவிதை
எழுதுவதால் வெம்மை யுற்றவளோ
கண்ணகி யாய்த்தன் காற்சிலம்பை – எறிந்து
விட்டவளோ ஊரைச் சுட்டவளோ – அவள்
விரல் நுனிகளில் தீ
வீணை இசைப்பாளோ – ஓவியம்
தீட்டி இழைப்பாளோ
சின்ன குழந்தையைத்தன் – நெஞ்சில்
வாரி அணைப்பாளோ
தென்றலை ஒதுக்கிவிட்டுக் – கை
வீசி நடப்பாளோ – செஞ்
சாந்துக் குழம்பெடுத்து – வாசற்
கோலம் வரைவாளோ – அவள்
விரல் நுனிகளில் தீ
நேச மனத்தினளோ – நேர்மைச்
சீற்றம் உடையவளோ
தேசு மிகுந்தவளோ – கையில்
திகிறி எடுப்பவளோ
மாயம் புரிபவளோ – இல்லை
மாய்மாலம் செய்பவளோ – நகச்
சாயம் பளபளக்க – என்னை
வாட்டி வதைத்தனளே – அவள்
விரல் நுனிகளில் தீ
drive.google.com

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue