வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக்கல்
மெய்யறம்
மாணவரியல்
17. பொய்ம்மை விலக்கல்
- நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை.
நடக்காததைச் சொல்வது பொய் ஆகும்.
- நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை.
நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும்.
- தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம்.
தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும்.
- புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம்.
குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும்.
- வாய்மையைத் தருவதே வாயென வறிக.
வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்” என்ற உறுப்பு “வாய்” என்று அறியப்படும்.
- மற்றவை யெலாம்வெறும் வாயிலென் றறிக.
வாய்மை(உண்மை)யைப் பேசாதபோது “வாய்”, உணவு உண்ணுவதற்கான ஒரு வழி மட்டுமே ஆகும்.
- வாய்மை யகத்தது தூய்மையை வளர்க்கும்.
உண்மை மனத் தூய்மையை வளர்க்கும்.
- பொய்ம்மை யகத்தது புரையினை வளர்க்கும்.
பொய்ம்மை, மனத்தில் குற்றத்தினை வளர்க்கும்.
- பொய்ம்மையை யாள்பவர் புன்னர காழ்வர்.
பொய் பேசுபவர்கள் நரகத்தில் விழுந்து துன்பம் அடைவார்கள்.
170.பொய்ம்மை யொரீஇயவர் புகழ்வீ டடைவர்.
பொய்யினை நீக்கியவர்கள் புகழுக்கு உரிய இடமான சொர்க்கத்தை அடைந்து இன்பம் அடைவார்கள்.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment