தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்
தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்
தோல்வி என்பது
தோல்வி அல்ல
வெற்றியின் எதிர்ச்சொல்
மாத்திரமே!
ஒவ்வொரு முறையும்
உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை!
அதன் பொருள்
தோல்வியல்ல!
நீ எவ்வாறு வெற்றி கொள்வது
என்பதற்கான படிப்பினைகள்
வெற்றிக்கான படிக்கட்டுகள்!
அதிகம், அதிகம்
அதிகம், அதிகம்
நீ வெற்றிகளை தவறவிடுகிறாய்
என்றால்………..
அதிகம், அதிகம்
நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய்
என்று பொருள்!
தோல்வி என்பது
தோல்வி என்பது
உனக்குள் நீ தோற்காதவரை
உன்னோடு நீ தோற்காதவரை
வெற்றிகளே!
தோல்வி என்பது
தோல்வி அல்ல
வெற்றியின் மறைபொருள்களே!
உன் முயற்சிக்கான வெற்றிகளே!
உனக்குள் நீ தோற்காதவரை
உன்னோடு நீ தோற்காதவரை…………!
-ஈழன்
Comments
Post a Comment