தலைப்பு-புளிப்பு எது?இனிப்பு எது?,கெர்சோம்செல்லையா :thalaippu_pulippu,inippu,chellaiya

புளிப்பு எது? இனிப்பு எது? 


வெளியே தெரியும் தோற்றம் கண்டு,
வெறுப்போ விருப்போ கொள்கின்றோம்.
எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு,
இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம்.
தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும்
திசையின் வழியை மறுக்கின்றோம்.
புளிப்பா? இனிப்பா? புரியாதவராய்
பொய்மையில்தானே இருக்கின்றோம்!

– கெர்சோம் செல்லையா