Skip to main content

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்






தலைப்பு-காக்கயைாரே-க.சச்சிதானந்தன்02 " thalaippu_kaakkaiyaare_ka.sachithananthan02

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?


பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?
காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன்
கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும்
செட்டியார் வீட்டிலே கலியாணம்
சிவனார் கோயில் விழாக்கோலம்
மேரி வீட்டிலே கொண்டாட்டம்
மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம்
கண்டிப் பக்கம் குளிரோ கடுமை
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை
பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா?
காக்கை: பொங்கலன்று வருவாராம்
புத்தகம் வாங்கி வருவாராம்
பந்தும் வாங்கி வருவாராம்
பாவை உமக்குத் தருவாராம்
மிகவும் நல்லாய்ப் படியென்று
கடிதம் நேற்றுப் போட்டாராம்
காகா என்று கரையட்டாம்.
– மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன், ஈழம்:
ஆனந்தத் தேன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்