நூல் என்றால் திருக்குறளே! – மு.கருணாநிதி
நூல் என்றால் திருக்குறளே!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரைதான்
நூல் என்றால் திருக்குறளே
எனப் போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார்.
- கலைஞர் மு.கருணாநிதி:
- இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா
Comments
Post a Comment