Skip to main content

அவளும் அப்படித்தான்! – பவித்திரா நந்தகுமார்




தலைப்பு-அவளும்அப்படித்தான்-பவித்ரா நந்தகுமார் : thalaippu_avalumappdithan_pavithra

அவளும் அப்படித்தான்!

அம்மா முத்தமிட
தந்தை பாசமாய் வருடி விட
தமையன் தங்காள்
செல்லச் சண்டையிட
பள்ளி சென்று வந்த
நங்கைதான் இவள்
அவளும் அப்படித்தான்
சென்றாள்
தமையன் வீடு
வரவில்லை என
ஏங்கியவள்
தொடராகத் தங்கையவளை
உயிரற்ற உடலாய்
ஆடையின்றிக் கண்டவள்
தகப்பனின் உயிர்த்
துடிப்பை அறிந்தவள்
அப்படித்தான் அவளும் 
சென்றாள் 
குடும்பம் எண்ணாமல் 
தன் இனம் காக்க….
வெறுத்து விடவில்லை அவள்
கடும் பயிற்சி கண்டு
சோர்ந்து விடவில்லை
அவள் இலட்சியக் கொள்கை
ஆயுதம் கையில்
எடுத்தாள் உடன் தோழிகளோடு
மணக்கோலம் காணாமல்
களத்தினில் உறுமும் புலியாக
வீரக்கோலம் கண்டாள்
ஈழத்து மங்கையிவள்
அப்படித்தான் சென்றாள்
எதிரியின் களமுனை
தகர்த்து
வெற்றி வாகை சூடி
தங்கையின் புதைகுழியில்
தவழ விட்டாள்
எதிரியின் இரத்தமதை
தமயனின் கனவுகள் நனவாக
ஈழத் தேசம்
உருவாக்க அவளும்
அப்படித்தான் சென்றாள்
உயிர் காத்தவள்
காவியம் காண்கிறாள்
எதிரின் கனவினை
உடைத்த தமிழ்த் திமிரோடு
மாவீர மகள் இவள்
வரலாற்றில் பதியப்பட்டாள்
அனைத்தும் இழந்த
அன்னையோ
பெருமை கொண்டாள்
நானும்
அப்படியே போகலாம் என்று
அவளும் அப்படித்தான்
சென்றாள்
எம் தேசம் காக்க!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்