Skip to main content

உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி



அகரமுதல 121, மாசி 09, 2047 / பிப்.21, 2016

தலைப்பு-உலகமொழி - thalaippu_ulakamozhi_thamizh

உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே
மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்துத் தவழும்
தூய மழலை தேன் மொழியே
இலக்கணச் செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே
மும்மைச் சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே
இலக்கணப் பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்!
– ஃகிசாலி
முத்திரை-ஈகரை - muthirai_eegarai

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்