எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி)
அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப்
பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில்
- இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி
யாழிடைப் பிறவா இசையே என்று
யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த
அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர்
- காதல னுக்கவள் சாவில் கற்பித்த
அரசி அவளை அடைந்து நோக்கலும்
கண்ணொடு கண்கள் நோக்கின காதலர்
இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து
- தழீஇக் கொண்டு கெழீஇய காதல்
நோக்கி,”நுவலக் கேண்மின் நுமக்குப்
புதிதாய்த் தோன்றும் இப்பூங் குழையும்
என்றன் தோழி; இன்று வரையில்
- காணப் பெற்றிலேன்; கண்டேன் இன்று
மக்களும் பிறவும் மாண்புடன் உருகும்
இன்னிசை கேட்டு இன்பந் துய்ப்போம்”
எனலும் யாவரும் ஏகினர் அவளொரு
- ஆடவ னென்று அறியா ராகி
வரலா றுரைக்க அரசியும் பின்னர்
நிகழ்ந்தவை கூறி மகிழ்ந்து வாழத்
தோழியர் போலவே தோற்றம் விளைக்க
- ஆடலன் தானும் அரிவையர் தோற்றம்
காதலர் வாழ்ந்த காட்சி
ஓதற்குரித்தே ஓதற்குரித்தே.
(நிறைவுறுகிறது)
Comments
Post a Comment