Skip to main content

செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் – கிரிசா ம‌ணாள‌ன்





தலைப்பு-செம்மைவாய்ந்தசெந்தமிழ் - thalaippu_semmaivaaynthasenthamizh

செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து! 

வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத்
திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து!
மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும்
செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து!
பொல்லாப் பிள்ளையி ன‌‌ருளினால் ந‌ம்பிமுன்
தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து!
ஆறுசேர் ச‌டையா ன‌வைமுன‌ம் அணிபெற‌
நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ்!
த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால்
ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!

கிரிசா மணாளன் - kirisamanalan
கிரிசா ம‌ணாள‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்