பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 27
அங்கம் : அருண்மொழி, பூங்குயில்இடம் : அருண்மொழி இல்லம்
நிலைமை : (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண்
தாங்கா இன்பம் அடைகின்றான்)
அருண் : பணியாளும் வந்து பல நாழி ஆச்சு!
அணியவே இன்னும் நாழிதான் என்ன?
பூங் : முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்!
துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்!
அருண் : ஆகா! என்ன! தேவியே! தேவி!
ஓகோ! விண்மீன் வானுடை கட்ட!
எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்!
தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க!
தேவியே! கண்ணே! தேவியேதான்!
தாவியே அணைக்கத் தூண்டுதே முத்தே!
பூங் கோவில் நாம் செல்வோம்! இப்போ!
இராவிலே பார்ப்போம்! தப்போ!
(காட்சி முடிவு)
- பாடும்
– ஆ.வெ.முல்லை நிலவழகன்
அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
Comments
Post a Comment