பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 28
அங்கம் : அன்பரசன், கவிஞர்இடம் : குடிலின் முன்வாசல்
நிலைமை : (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க்
கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க
இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட
அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்)
கவி : பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை!
சொல்லால் சொல்ல வழியும் உண்டா?
அன் : பரம்பரையாகக் கொள்ளயடித்தே
வருவோரை நாம் தான் செய்வது என்ன?
கவி : திருடனாய்ப் பார்த்து திருந்திட வேண்டும்; கயவர்
திருந்தாதபோது திருத்திட வேண்டும்! எந்த
நீதி நூல் பலவும் நெறிநூல் பலவும்! சந்து
வீதிகள் பலவாய்த்! தொண்டர்கள் பலராய்! இங்கு
ஆயிரமாயிரம் தோன்றினால் கூட! பழைய
பாயிரம்போலப் பயனற்றுப் போகும்!
(காட்சி முடிவு)
(பாடும்)
– ஆ.வெ.முல்லை நிலவழகன்
Comments
Post a Comment