Skip to main content

அழிக்கின்றபகை வெல்வோம் – க. உலோகன்

velvom_eezham
களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே
கரித்துண்டாய்ப் போகிறான் தமிழன்!
விழித்தின்று குரல்கொடுதமிழா! கொடும்
விதிவெல்லப் புறப்படுதமிழா!
பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று
பதியின்றியலைகிறான் இன்று!
துயில்கொள்ளத் தரைகூடஇன்றி-அவன்
துடித்தங்கு மடிகிறான்இரைதண்ணியின்றி!
அழிநச்சுவாயுவின் எரிபட்டுஉறவுகள்
உருகெட்டுச் சாதல்கண்டும்
பரிவற்றுவாய்மூடிப் பதுங்கிடும் உலகத்தின்
சதிவெட்டக் குரல் கொடு தமிழா!
வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம்
விழிமூடியுறங்கினால் யாருள்ளார் தமிழா!
அழிக்கின்றபகை வெல்வோம் தமிழா!- உளம்
அனல்பொங்க உலகிற்கு உண்மைசொல்தமிழா!
– க. உலோகன்
loganathan@logan01


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்