தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்


kavignar mutharasan01
 நறுந்தமிழே வாழ்த்திடுவாய்!
ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும்
ஆளுமைசெயும் தமிழே!
போர்ப்பாட்டுப் பாடுதற்குப்
புறப்பட்ட பூந்தமிழே!
பொறுமையுடன் நடனமிடும்
புதிரான தமிழே!
பெருமையுடன் வாழ்த்துகிறேன்!
பெருமிதமும் கொள்கின்றேன்!
வந்தாரை வாழவைக்கும்
வளமான செந்தமிழே!
சொந்தமெனும் உணர்வோடு
சொக்குகிற தமிழே!
சிந்திக்கத் தெரிந்தவர்க்குச்
சிரிக்கின்ற தமிழே!
நிந்திக்கத் தெரியாத
.நிலைத்தபுகழ்த்தமிழே!
சொல்லில் அடங்காத
சொல்லடுக்குத் தமிழே!
பல்சுவையில் குன்றாத
பழம்புகழே! பார்முதலே!
வெல்கின்ற வழியெமக்கு
விழிப்புடனே தந்திடுவாய்!
நல்லோனாய் இருந்திடவே
நறுந்தமிழே வாழ்த்திடுவாய்!
- கவிஞர் முத்தரசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்