Skip to main content

வள்ளலார் வழியே வாழ்விற்கறம் ! – புலவர் பழ.தமிழாளன்

 அகரமுதல






வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் !

1.

அருட்பே   ரொளியே  இறையெனக்

                         கொண்ட   அருளகத்தார் /

உருவ  வழிபா  டொழித்தசீர்   ஒப்பில்

                                             ஒளிமுகத்தர் /

கருவில்  திருவினைக்  கையகம்

                           பெற்ற  கலைநிறைஞர் /

அருட்பா  படைத்தே  அதன்வழி  வாவென்

                                  (று)   அழைத்தனரே ! /

2.

சாதி     சமயச்   சழக்கை   ஒழித்துச்

                                              சமமெனவே /

ஓதியும்  மக்களை  ஒன்று  படுத்திய

                                            ஒண்மையராம் /

வேதியர்  கூற்றை  விலக்கியே  வாழ்ந்த

                                        நல்    வள்ளலவர் /

ஏதிலார்  கண்டே  இரக்க  மழையை

                                             இறைத்தவரே ! /

3.

வாடு பயிரினைக்  கண்டபோ தெல்லாமே

                                                     வாடியவர் /

கூடும்  உடலில்  உயிரையே  காக்க

                                                உணவளித்து /

வாடு  வறுமைத்தீ  வையகம்   ஓட்டியே

                                              வைத்ததொடு /

நாடுவாழ்  மக்கள்  நலமுறப்  பாஅருள்

                                                   நல்கினரே ! /

4.

பாடும்   அருட்பாவும்  பாமருள்  என்று

                                              பகன்றவரைக் /

கூடு முறைமன்றில்  கண்டே தொழுந்திடு

                                                தோற்றமவர் /

ஏடு  முறைவழித்   தீர்க்கும்   நடுவர்

                                             எழுந்தனரேல் /

பாடு  தமிழ்பாவே  பண்பார்  அருட்பாப்

                                              படையலதே ! /

5.

வள்ளல்  பெருமான்  வழியறம்  பற்றியே

                                           வையகத்தார் /

தள்ளாதே  ஒன்றித்  தடவழிச்  செல்லின்

                                         தலைமுறையின்/

உள்ளம்  அறவுணர்  ஓங்கி  மலரும்

                                              உலகமதில் /

கள்ளத்  தனமுமே  காருறை  பாரில்

                                            களைந்திடுமே ! /

              புலவர் பழ.தமிழாளன்,

       இயக்குநர்—பைந்தமிழியக்கம்,  திருச்சிராப்பள்ளி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்