Posts

Showing posts from October, 2022

அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! – பழ.தமிழாளன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 November 2022         No Comment அறத்தமிழ்த்  தாயே  உறக்கம்  களைக ! 1. மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே !      மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல்  கண்டும்     நீருறக்கம் கொள்ளுவது  நன்றாமோ சொல்க பாத்திறத்த   பைந்தமிழ  இனமதனை வீழ்த்திப்     பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில்   கண்டும் பூத்திருக்கும்  தூக்கமதன்  பூவிழியால் கண்டே     பகைத்தமிழ  ஆரியரைப்  பாரைவிட்டே ஓட்டு ! 2. இனத்தமிழ  இனமதனை  அழிப்பதற்குப் பாரில்     எடுபிடியாம்  சில்லறையை  இணைத்துவைத்தே  இன்பக் கனவுகண்டே  ஆடுவதைக்  களையெடுத்தே  ஓட்டல்     கதிரொக்கும்  தமிழ்த்தாயுன்  கடமையெனக்  கொள்க தனதுநலம்  கொண்டவரைத்  தடிகொண்டு  தாக்கித்  ...

தமிழ்நாடும் மொழியும் 12 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 November 2022         No Comment (தமிழ்நாடும் மொழியும் 11 தொடர்ச்சி) தமிழ்நாடும்   மொழியும் கடைச்சங்கக் காலம்  தொடர்ச்சி சமய நிலை திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்’ பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை யேறுதலும், அன்றிக் கைம்மை நோன்பு நோற்றலும் உண்டு என்றும் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. காப்பிய க் காலம் தமிழக வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் காப்பியக் காலமாகும் . காப்பியக் காலம் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய காலமாகும். இவ்விரட்டைக் காப்பியங்களுள் சிலப்பதிகார...

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14

Image
 அகரமுதல +++  இலக்குவனார் திருவள்ளுவன்         30 October 2022         No Comment ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி ) ‘ பழந்தமிழ் ’ 4.  மொழி   மாற்றங்கள்   தொடர்ச்சி   வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை .  ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்-  கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள்  -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின் தன்னுடைய  வடமொழிக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்குமொழிக்கு இப்பொழுது அரிதாம் என்பது உண்மை, கன்னடத்திற்கு அதனினும் அரிதாம், மலையாளத்திற்கு அவை எல்லாவற்றையும்விட அரிதாம்.  அவற்றின் இயல்பு அதுவேயாயினும் திராவிட மொழிகள் அனைத்திலும்  உயர்தனி...

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 12

Image
 அகரமுதல +++  இலக்குவனார் திருவள்ளுவன்         29 October 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 11 தொடர்ச்சி) ஊரும்   பேரும்  –12 நாடும் நகரமும் நாடு      நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு என்று அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.     சிறுபான்மையாகச் சில தனியூர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்பு நாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. 1  அதற்கு எதிரே ஆற்...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 76

Image
 அகரமுதல +++  இலக்குவனார் திருவள்ளுவன்         28 October 2022         No Comment ( குறிஞ்சி மலர்  75 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் அத்தியாயம் 27   தொடர்ச்சி மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை எந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்? ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?       — பாரதி அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக்  கிராமத்துக்கு த் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விரைவுபடுத்தினான். அரசினர் அலுவலகங்களில்தான் தொடர்புடையவர்களைப் பார்த்துத் தூண்டிக் கொண்டிருக்காவிட்டால் தானாகவே எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லையே. வெளிந...